செவ்வாய், 21 ஜூன், 2011


சமச்சீர் கல்வித் திட்ட எதிர்ப்பும் - குலக் கல்வித் திட்ட சிந்தனையும்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்ப் போர் யார்? அந்த வரிசையில் முதலில் துருத்திக் கொண்டு நிற்பவர் திருவாளர் சோ ராமசாமி. அவர்தானே இப்பொழுது பார்ப்பன இனத்துக்கு, அறிவிக்கப்படாத ஏகத் தலைவர் - அ.தி.மு.க. ஆட்சியின் ராஜகுரு!
சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி அவர் என்ன திருவாய் மலர்கிறார்? எல்லா வகைக் கல்வியையும் கீழே இறக்கிச் சமன் படுத்துவது சமத் தாழ்வு கல்வி முறை என்று இதற்குப் பட்டம் சூட்டியுள்ளார்.
ஸ்டேட் போர்டு, ஓரியண்டல் ஸ்கூல் ஆஃப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்திய முறை, மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.ஈ. என்ற பல கல்வி முறைப் பாடத் திட்டங்களும்  நடைமுறையில் உள்ளன. இதில் சி.பி.எஸ்.ஈ. என்பது அகில இந்திய அளவில் சமச்சீர் கொண்டதாகும்.
தமிழ்நாட்டளவில் இப்படிப் பல் வேறு கல்வி திட்டங்கள் இருப்பதாக ஒரு குழப்ப நிலை நீடிக்கிறதே!
மெட்ரிக்குலேஷன் படித்தால் ஒரு மாதிரி,- ஸ்டேட் போர்டு ஸ்கூலில் படித்தால் தரம் தாழ்ந்த மாதிரியான சமூக மதிப்பீடுகள் இருக்கவே செய் கின்றன. பாடத் திட்டங்கள் மாறி மாறி இருக்கும் நிலையில் மதிப்பெண்களை எப்படி அடிப்படையாகக் கொள்ள முடியும்? தொழிற் கல்லூரிகளிலோ, கலைக் கல்லூரிகளிலோ சேருவதற்குப் பல்வேறு மாறுபட்ட கல்விக் கூடங் களில் படிப்போரின் மதிப்பெண்களை எப்படி அடிப்படையாகக் கொள்ள முடியும் என்பது போன்ற பிரச் சினைகள் இதில் உள்ளடக்கம்.
ஏழை- பணக்காரப் பேதம், சிறு வர்கள், மாணவர்கள் மத்தியிலே தெரி யக் கூடாது, - உணரக் கூடாது என்ப தற்காகத்தானே சீருடைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.  அப்படி இருக்கும் போது கல்வித் திட்டத்தில் மட்டும் நெட்டைக் குதிரை, மட்டக் குதிரை என்ற வேறுபாடு ஏன் என்ற வினா நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
அதற்கொரு முடிவுதான் கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டதுதான் சமச்சீர் கல்வித் திட்டம்! கடந்த ஆண்டே முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் அமல்படுத்தப்பட்டும் விட்டது.
தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு அ.இ. அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் ஏட்டிக்குப் போட்டி என்ற அணுகுமுறை இங்கே கிடுகிடுக்கிறது.
தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த கல்வித் திட்டமா - ஏற்கமாட்டோம் என்று அவசர அவசரமாக சட்டம் நிறைவேற்றப்படுகிறது.
இப்பொழுது நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய கையுடன் குழுக்கள் அமைக்கப் படுகின்றனவாம். ஆராய்ச்சி செய்யப் போகிறார்களாம். தலைமைச் செய லாளர்தான் இந்தக் குழுவின் தலைவ ராம்.
முதல் அமைச்சரின் மனப்பான்மை இதில் என்ன என்று தெரிந்துவிட்ட பிறகு அதிகாரிகள் என்ன முடிவு எடுப் பார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான்.  - எழுதி வைக்கப்பட்ட முடிவுதான்.  (இப்பொழுது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆலோசகர்கள், கேட்கவும் வேண்டுமோ!)
சோ அய்யர் எழுதுவதைப் பார்த் தால் இதில் வெறும் அரசியல் கண் ணோட்டம் என்பதை விட வருணா சிரமக் கண்ணோட்டம் என்ற கொம்பு நீட்டிக்கொண்டிருப்பதை நன்றாகவே அறிய முடிகிறது.
சிலர் உயர் வகைக் கல்வியைப் பெறுவதை, தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்ட திட்டம் என்று சமச்சீர் கல்வியைக் குறிப்பிடுகின்றார். (துக்ளக் தலையங்கம் 22.-6.-2011)
யார் அந்த சிலர்? அந்த உயர் வகைக் கல்வி என்பது என்ன? என்ற கேள்வி எழுகிறது.
அந்தச் சிலர் என்பது பார்ப்பனர் களே! அவர்களுக்குத் தேவையானது என்பது. அந்த உயர் வகைக் கல்வி என்பதே! சமச்சீர் கல்வி என்று வந்து விட்டால் அந்தச் சிலர் - இந்தச் சிலர் என்ற வேறுபாடு இல்லாமல், அந்த உயர் வகைக் கல்வி _ இந்த வகைக் கல்வி என்ற மேடு பள்ளம் இல்லாமல் அனைத்துக் குடி மக்களும் ஒரே வகையான கல்வியைப் படிக்க வேண்டும் என்ற சமநோக்கும், அகலப் பார்வையும் வந்து விடுமே! ஏற்பார்களா மேட்டுக் குடியினர்?
இதுதான் அவர்களுக்குப் பிடிக்க வில்லை. பார்ப்பானுக்கும் பறையனுக்கும் ஒரே மாதிரியான கல்வியா என்கிற பார்ப்பனத்தனம் இதில்  திமிர் முறித்து பூணூல் கொழுப்புடன் எகிறிக் குதிக்கிறது.
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் (ஜூன் 2011) இதழில் தலையங்கப் பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ள பகுதி முக்கியமானது. இது குறித்து விடுதலை யில் இதற்கு முன்பே தலையங்கமும் தீட்டியுள்ளது. (14.6.2011) உங்கள் நூலகம் தலையங்கம் என்ன கூறுகிறது?
ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். சமச்சீர் கல்வித் திட்டப் பாடப் புத்தகங்களை நிபுணர் குழு வைத்து ஆராயப் போவதாக அறிவித் துள்ளார். அவர் நிறுத்தி வைத்துள் ளாரா? குப்பைத் தொட்டியில் வீசி விட்டாரா? என்று தெரியவில்லை. இது பற்றி வெளி வந்திருக்கும் செய்திகளுக்கு இணைய தளங்களில் பலர் தங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்களாகப் பதிவு செய்துள்ளனர். அவற்றிலிருந்து பார்ப்பனியக் கருத்து நிலையை ஊக்க முடன் ஆதரிக்கும் சீரழிந்த நடுத்தர வர்க்கத்தினர் சமச்சீர் கல்வித் திட் டத்தை ஜெயலலிதா குப்பைத் தொட் டியில் வீசி விட்டதாக குதூகலிக்கின் றனர் என்று தெரிகிறது.
றீறீறீ
தினமலர் உள்ளிட்ட ஒரு சில பார்ப்பனிய கருத்து நிலை சார்ந்த ஊட கங்களும், உயர் நடுத்தர வர்க்கப் பிரி வினரும் சமச்சீர் கல்வித் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் சமத்துவம் என்ற பேச்சே அவர்களுக்குக் கசக்கிறது : தகுதி, திறன் என்பன பற்றி யெல்லாம் வாய் கிழிய அவர்கள் பேசுகின்றனர். இன்னொரு புறம் இவர்கள் தங்கள் பார்ப்பனிய - சாதிய கருத்து நிலையையே பெரும் பகுதி யினரின் கருத்து நிலையாகக் காட்ட முயற்சிக்கின்றனர். தகுதி, திறமை பற்றிய பொய்மைகளைக் கிழித்தெறிய வேண் டியது நமது கடமை என்று உங்கள் நூலகம் தலையங்கத்தில் எழுதியிருப்பது உண்மைத் தன்மையதாகும்.
நல்லவர்களின் நாடித் துடிப்பு நம் வாழ்வு என்னும் கிறித்தவ அமைப்பு நடத்தி வரும் வார இதழில் (19-6-2011) ஒரு கருத்துக் கூறப்பட்டுள்ளது.
அம்மாவின் மனுதர்ம பார்ப்பன சித்தாந்தம் அய்ந்தாண்டுகளுக்கு இனி மறைமுகமாக அமல்படுத்தப் படும். முதலடியே முதல் கோணலானது. நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்மா செய்த துரோகமாகும். சமச்சீர் கல்வி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை ராஜாஜியின் குலக் கல்வித் திணிப்பு போன்ற பார்ப்பன இனச் சதியின் நூற்றாண்டு காலப் போராட்ட தொடர்ச்சியாக இனம் காணலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல். திருமா வளவன் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற எழுத்தாளர் சின்னக் குத்தூசி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும்போது (29-5-2011) ஒரு கருத்தினைப் பதிவு செய்தார்.
பறையனுக்கும், பார்ப்பானுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைத் தருகின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை இங்கே நடைமுறைப்படுத்த விடக்கூடாது. அதை அழித்தே தீருவேன் என்கிற கருத்துப் போர் தமிழகத்தில் நடந்து கொண்டி ருக்கிறது
(தமிழ்மண் ஜூன் 2011 பக்கம் 10) என்று விமர்சித்துள்ளார்.
அனைவருக்கும் கல்வி, அதுவும் சம மான கல்வி என்பது பார்ப்பனியத்துக்கு எதிரானதே! சோவின் தலையங்கம் அதனை வெளிப்படையாகவே கூறுகிறது.
வெறிநாயை அடித்துக் கொல்லுவது போல வெகு மக்களால் அடித்து விரட்டப்பட்ட ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை - இந்தக் கால கட் டத்திலும் சோ ஆதரித்து எழுதுகிறார் என்றால், அந்தப் பார்ப்பனப் புத்தி அனைவருக்கும் சமமான கல்வி என்னும் சமச்சீர் கல்வியை எப்படி ஏற்றுக் கொள்ளும்? சுருக்கமாகச் சொன்னால் சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்கள் ஆச்சாரி யாரின் குலக்கல்வித் திட்ட புத்தி யுள்ளவர்கள். சமச்சீர் கல்வி வேண்டும் என்பவர்கள் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒழித்த தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வழிபட்டவர்கள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்ல வேண்டுமா?
சமச்சீர் கல்வி பார்ப்பனர் அல்லா தாருக்கானது. சமச்சீர் கல்வி எதிர்ப்பே பார்ப்பனர்களுக்கானது.
ஆம். குலக் கல்வித் திட்டப் போர்  வேறு ஒரு பெயரில் மூண்டுவிட்டது.
தமிழர்களின் கல்வியில் கை வைத்த வர்களைத் தமிழர்கள் தண்டிக்காமல் விட்டதில்லை. 1952 இல் ஆட்சிக்கு வந்த ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வர்களின் தலையில் கைவைத்த எம்.ஜி.ஆர். அவர்கள் 1980 இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சரியான அடி வாங்கினார். (மொத்தம் 39  இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றி பெற்றார்.)
சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களைக் கொண்ட ஒரு குழுவினை முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அறி வித்து விட்டார்.
அதற்கான விலையை இந்த ஆட்சி கொடுக்க வேண்டி வரும்; -இது கல்லின் மேல் எழுத்தாகும்.

மின்சாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக