புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
நாடு முழுவதிலும், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள மக்கள் தொகைக்  கணக்கெடுப்புடன், ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நடத்த மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நடைமுறையும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் கிராமப்புற வறுமை ஒழிப்புத் திட்ட அமைச்சகத்துடனும், இந்தியாவின் பதிவாளர் ஜெனரலுடனும்  இணைந்து கிராமப்புற வளர்ச்சித் திட்ட அமைச்சகம் இந்த கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளும். நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங் களிலும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களை அடையாளம் காண இது வழிவகுக்கும். 

இந்தக் கணக் கெடுப்புப் பணி முழுமையாக 2011 டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் புள்ளி விவரங்கள் 2012-2013 முதல் 2016-17 வரையிலான 12 ஆவது அய்ந்தாண்டு திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்புடன் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் எடுக்கப்படும்.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் எடுக்கப்படுவது வாடிக்கை யாகும்.

ஆனாலும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு என்பது 1931ஆம் ஆண்டுக்குப்பின் எடுக்கப்பட்டதில்லை!

இதனால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட் டோர் மக்கள் தொகையில் எத்தனைப் பேர், அவர்களின் சதவிகிதம் என்ன என்பது போன்ற தகவல்கள் கிடைப்ப தில்லை.

குறிப்பாக இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு, தாழ்த்தப்பட்டோ ருக்கு 19 விழுக்காடு இருக்கிறது. மத்திய அரசிலோ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வெறும் 27 விழுக்காடு மட்டுமே உள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 22.5 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.

இவை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது நீதிபதிகள் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? தாழ்த்தப்பட்டோர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டோர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, எத்தனை சதவிகிதம் என்ற வினாவைத்தான் தொடுக்கிறார்கள்.

அதற்குச் சரியாக பதில் - தகவல் அரசு தரப்பில் கிடையாது. 1931ஆம் ஆண்டு கணக்கைச் சொன்னால் 70 அல்லது 80 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கு இப்பொழுது எப்படிப் பொருந்தும் என்றும் நீதிபதிகள் கேட்கிறார்கள்.

சரியான புள்ளி விவரம் இல்லாத நிலையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பானவர்கள் பிற்படுத்தப்பட்டோர் வெறும் 40 விழுக்காடுதான் என்கிற அளவுக்கு எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

இப்பொழுதுகூட ஜாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்று முட்டுக்கட்டை போடுபவர்கள்கூட இடஒதுக்கீட் டுக்கு எதிர்ப்பாக இருக்கக் கூடிய உயர் ஜாதி மக்களும், ஏடுகளும் தான்.

உண்மையான புள்ளி விவரம் வெளிச் சத்துக்கு வந்துவிட்டால் இன்னும் கூடுதலாக இடஒதுக் கீட்டைக் கேட்டால் என்ன செய்வது, அதேபோல மக்கள் தொகையில் பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம் என்பது அதிகார பூர்வமாகத் தெரிய வந்தால் - கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அவர்கள் எத்தனை மடங்கு விகிதாசாரத்துக்கு மேல் அனுபவிக்கிறார்கள் என்பதும் அம்பலத்துக்கு வந்து விடுமே இத்தகைய காரணங் களால்தான் ஜாதிவாரி கணக்கெடுப்புக் கூடாது - தேவையில்லை என்று கூறுகிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஜாதி என்பது ஒழிக்கப்பட்டு விடவில்லை. இந்த நிலையில் ஜாதி வாரியான புள்ளி விவரம் என்பது அவசியம் தேவையான ஒன்றே!

கல்வி, வேலை வாய்ப்பில் மட்டும் அல்ல - பொரு ளாதார ரீதியான விவரங்களும் திரட்டப்பட்டால்தான், பொருளாதார வளர்ச்சிக்கும் இம்மக்களுக்கு என்னென்ன செய்யப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியும்.

வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களைக் கணக்கிடும்போது அவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கவே அதிக வாய்ப்புண்டு. ஜாதிக்கும், வறுமைக்கும் உள்ள உறவைத் தெரிந்து கொள்ளவும் இது அவசியமாகிறது. சமூக இயலாருக்கு இது அவசியம் தேவைப்படும் புள்ளி விவரமாகும்.

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும் இந்த அடிப்படை விவரங்கள் அத்தியாவசியமானவையே!

இந்தப் புள்ளி விவரங்கள் துல்லியமாக எடுக்கப்பட வேண்டும்; எடுக்கப்படும் புள்ளி விவரங்கள் சரி யானவைகளா என்று மேற்பார்வையிடப்பட வேண்டும். ஏனென்றால் இது ஓர் அடிப்படையான தகவலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக