புதன், 22 ஜூன், 2011

இது மதச்சார்பின்மையா


விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டையொட்டி அவரின் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் பரப்பும் நோக்கத்தில் இந்திய ரயில்வே துறை மற்றும் இராமகிருஷ்ண மடம் இணைந்து சிறப்புக் கண்காட்சி ரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நாடு முழுவதும் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2011 ஜனவரி 12 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் அன்றைய ரயில்வே அமைச்சர் மம்தா அவர்களால் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கப் பட்டது.

விவேகானந்தர் சீர்திருத்தமான கருத்துகளை சொல்லியிருந்தாலும்கூட (அதுவும் அரையும் குறையுமாக) அடிப்படையில் அவர் ஓர் இந்து மதவாதி, இந்து மதத்தின் தத்துவங்களை அமெரிக்கா வரை சென்று எடுத்துரைத்து வந்தவர் என்று அறியப்பட்டவர்;

அப்படிப்பட்ட ஒரு மதச்சார்பு மனிதரின் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் பரப்புவதை அரசு எடுத்துக் கொண்டு செயல்படுத்துவது எந்த வகையில் சரியான தாக இருக்க முடியும்? இந்த வாய்ப்பு மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும், மதம் சாராத சிந்தனையாளர் களுக்கும் கிடைக்க மத்திய அரசு வகை செய்யுமா என்ற கேள்விகள் கண்டிப்பாக எழவே செய்யும்.

அதுவும் மதச் சார்பற்ற அரசு என்கிறபோது இதுபோன்ற செயல்களில் எப்படி ஈடுபடலாம்? மக் களின் வரிப் பணம் குறிப்பிட்ட மதம் சார்ந்த பிரச் சாரத்துக்குச் செலவு செய்யப்படுவது சரியானது தானா?

இதுகுறித்து ஊடகங்களோ, மதச் சார்பற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களோ ஏன் பிரச்சினை செய்யவில்லை- வினாக்களை எழுப்பவில்லை? அதுவும் இராமகிருஷ்ண மடமும், இந்திய ரயில்வே துறையும் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டு இருக்கிறது. இராமகிருஷ்ணன் விவேகானந்தரின் குருவாவார். அவருடைய கருத்துகளும் பிரச்சினைக்குரியவை.

ஒரு கட்டத்தில் தன் மலத்தைத் தானே தின்றவர் என்ற மாபெரும் மகான் ஆவார். கேட்டால் அது ஓர் உயர்ந்த கட்ட நிலை! அவர்களுக்கு மலம் என்பது நமது பார்வையில் உள்ளதல்ல - அவற்றையெல்லாம் கடந்து விட்ட ஒரு பெரும் கட்டம் என்றெல்லாம் வார்த்தை ஜாலங்களால் பேசுவார்கள்.

நடமாட முடியாத நிலையில் சாய்வு நாற்காலியில் காலத்தைக் கழிப்போர் எதையாவது தின்று தொலையட்டும் - நாசமாகப் போகட்டும். மாணவர்கள் மத்தியிலே இந்தக் கசுமாலங்களைப் பரப்புகிறார்கள் என்கிறபோதுதான் இது குறித்துக் கடுமையாக சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

எத்தனையோ தலைவர்களுக்கு நூற்றாண்டு விழா மற்றும் 150 ஆம் ஆண்டுவிழாக்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் இது மாதிரியான சிறப்புக் கண்காட்சிகள் நடத்தப் படவில்லையே!

இதன் பின்னணியில் பார்ப்பனீய சக்திகள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்... விவேகானந்தர் பார்ப்பனர் அல்லாதவர் ஆவார். அத்தகையவர்களைக் கொண்டு இந்து மதத்தையோ, பார்ப்பனீயத்தையோ பிரச்சாரம் செய்வது என்பது பார்ப்பனர்களின் ராஜதந்திர நடவடிக்கையாகும்.

இளைஞர்களுக்குத் தேவையான கொஞ்சம் முற்போக்கு வாடை வீசும் வசனங்களைக்கூட விவேகானந்தர் கூறியதுண்டு - அவையெல்லாம் இத்தகைய கண்காட்சியில் இடம் பெறுமா?  குறிப்பாக கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடக் கற்றுக் கொள் என்றாரே விவேகானந்தர் - அந்தப் பொன்மொழிகள் எல்லாம் இந்த ரயில் கண்காட்சியில் இடம்பெறுமா என்று தெரியவில்லை.

ஆணவக்காரர், இதயமில்லாதவர், கொலைகாரர் என்று ஆதிசங்கரரை வருணித்தாரே விவேகானந்தர் - அந்த வாசகங்கள் எல்லாம் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுமா?

மனிதன் படும் ஹிம்சையைப் பற்றிக் கவலைப் படாமல் கோமாதா (பசுத்தாய்) பற்றிக் கவலைப்படுபவர் களைப்பற்றிக் கேலி பேசியவராயிற்றே விவேகானந்தர். உங்களைப் போன்ற புத்தியுள்ளவர்கள் மாட்டுக்குப் பிறக்காமல் (கோமாதா) மனிதர்களுக்கா பிறக்க முடியும் என்று மானம் கெட கேட்டாரே - அதுபோன்ற பகுதிகளை அச்சிட்டுக் கண்காட்சியில் வைத்திருந் தாலாவது பிரயோசனப்படும்.

இந்து மதம், ஆன்மா என்று ஒன்றுக்கும் உதவாதவற்றைக் காட்சிக்கு வைத்து இளைஞர்களை, மாணவர்களைக் கெடுப்பது நியாயம்தானா?

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; சீர்திருத்த எண்ணங்களைத் தூண்டவேண்டும் - அதுதான் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்துக் கொண்டு - இன்னொரு பக்கத்தில் இப்படிப் பத்தாம் பசலித்தனமானவற்றைப் பரப்பும் வேலையில் ஈடுபடுவது அசல் முரண்பாடு அல்லவா?

முற்போக்கு இயக்கங்கள் இதுபற்றியெல்லாம் எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும்; முற்போக்கு ஊடகங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும்.

கொடுப்பார்களா?

எழுதுவார்களா?

எங்கே பார்ப்போம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக