செவ்வாய், 21 ஜூன், 2011

கடும் முயறசியில் கருக் கொண்டது சமச்சீர் கலவி-அரசியல் பார்வை தேவையில்லை


புலவர் அருணா - பொன்னுசாமி
(சமச்சீர் கல்வி பாடத் திட்டக் குழு உறுப்பினர்)

கரூர் நகர திராவிடர் கழகத் தலைவர்  செல்வ ராசு, கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மு.க. இராசசேகரன், கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன், சமச்சீர் கல்வி பாடத் திட்டக்குழு (தமிழ்) உறுப்பினர் புலவர் அருணா - பொன்னுசாமி, பெரியார் பெருங் கவிஞர் பாரி ஆகியோர் (கரூர் 19.6.2011)

(ஓய்வு பெற்ற தமிழாசிரியரும் தலைமை ஆசிரியருமான புலவர் அருணா - பொன்னுசாமி எம்.ஏ. அவர்கள் தமிழ்நாடு அரசு - சமச்சீர் கல்விக் குழுவின் உறுப் பினராக இருந்து பணியாற்றியவர். சமச்சீர் கல்வி தொடர்பாக அவரி டம் தொடர்பு கொண்டு கேட்கப்பட்டபோது அவர் கூறியவை வருமாறு:)

சமச்சீர் கல்வி தொடர்பான தமிழ்ப் பாட நூல் குழுவில் 72 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். கரூர்  புலவர் அருணா பொன்னுசாமி எம்.ஏ., அவர்களும் அதில் ஓர் உறுப் பினர் ஆவார்.

சென்னையில் நான்கு மாதங்கள் தங்கி நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பாடநூல் தயாரிப்பில் ஈடுபட்டதாக புலவர் அருணா - பொன்னுசாமி கூறினார்.

திருச்சி - பாரதிதாசன் பல் கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமார் தலைமை யில் ஒன்பது பேர்கள் கொண்ட குழு ஒன்று உலகின் பல்வேறு நாடு களிலும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் பாடத் திட்டங்கள் எந்த வகையில் அமைந்துள்ளன என்பதை நேரில் அறிந்து ஆய்வு செய்து, அதன் அடிப் படையில் சமச்சீர்க் கல்விக்கான பாடத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன. பின்லாந்து நாட்டில் மட்டுமே அனைத்து நிலைக்கல்வி நிறுவனங் களும் அரசால் நடத்தப்படுகின்றன. புத்தகங்கள் உட்பட எல்லாம் இல வசமாக அந்நாட்டில் வழங்கப்படு கின்றன.

உலகமயமாக்கல் என்பதன் அடிப்படையில் உண்டாக்கப்பட்டது தான் மெட்ரிக் கல்வி. சமச்சீர் கல்வி என்பது படைப்பாற்றலை ஊக்குவிக்கக் கூடியதாகும்.

திருக்குறளில் இருந்து குறள் களைச் சொல்லிக்கொடுக்கும் பொழுது சிற்றினம் சேராமை என்று சொல்லிக் கொடுப்பதைவிட (எதிர்மறையில் அல் லாமல்) நட்பு என்ற அதிகாரத்திலிருந்து குறள்கள் இடம் பெறும்படிச் செய்யப் பட்டது.

கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் அறிவியலுக்குப் புறம்பாக அது அமையக் கூடாது - எடுத்துக்காட்டாக பித்தா பிறை சூடிப் பெருமானே என்ற செய் யுள் இடம் பெற்றால், சிவபெருமான். தலையில் சூடப்பட்டு இருக்கும் சந் திரன்  என்று பொருள்படுகிறது. இது  அறிவியலுக்கு மாறான ஒன்று. இது போல் அமையக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டு பொதுவான கடவுள் வாழ்த்துப் பாடல் இடம் பெறச் செய் யப்பட்டது.  அறவே கடவுள் வாழ்த்து நீக்கப்படவும் இல்லை. இரண்டாவதாக மொழி வாழ்த்துப் பாடலாக நீராரும் கடலுடுத்த என்ற பாடல் வைக்கப் பட்டது.

மூன்றாவதாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் குறிக்கோள் பாடல் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களால் இயற்றப்பட்டது. இடம் பெறச் செய்யப்பட்டது. இதுபற்றியெல் லாம் விவாதித்துதான் முடிவு எடுக் கப்பட்டது. கலைஞர் எழுதினார் என்ப தற்காக அல்ல - கலைஞர் படைப் பாற்றல் மிக்கவர் என்பது அரசியலுக்கு அப்பால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

கவிஞர் கனிமொழி கவிதை இடம் பெற்றதாகச் சொல்லுவது தவறாகும். தமிழர்கள் கையாண்ட இசைக்  கருவிகள்பற்றி வரும்பொழுது சங்கமத் தில் ஒரு காட்சி இடம் பெறுகிறது. அவ்வளவுதான் அதில் கனிமொழி பெயர் கிடையாது.

பாரத ரத்னா பட்டம் பெற்றவர்களில் ஒருவரைப்பற்றி பாடத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிற முறையில் எம்.ஜி.ஆர். பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது.

தந்தை பெரியார், அண்ணா, காமராசர், அம்பேத்கர் பற்றிய பாடங்களும் இடம் பெற்றுள்ளன. இவர்கள் எல்லாம் சமுதாயத்துக்குப் பாடுபட்ட தலைவர்கள் அல்லவா!

நாங்கள் தயாரித்த பாடத் திட்டங்களை அதற்குமேல் ஒன்பது கல்லூரிப் பேராசிரியர்கள் ஆய்வு செய்வார்கள். அவர்கள் கூறும் திருத்தங்களின் அடிப்படையில் இறுதியாக பாடத் திட்டங்கள் நிறைவு பெறும்.

இந்தப் பாடத் திட்டங்கள் இணைய தளத்தில் வெளியிடப் பட்டன. பொது மக்களின் கருத் துகள் வரவேற்கப்பட்டன. அதுபோல் தெரிவிக்கப்பட்ட கருத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. சமச்சீர் கல்வித் திட்டம் என்பது வணிக ரீதியான கல்வித் திட்டத்துக்குப் போடப்பட்ட ஒரு கடிவாளம் ஆகும்.

அனைவருக்கும் சமமான, சமத்துவமான கல்வி என்பதுதான் இதன் குறிக்கோளாகும். ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி அளிக்கப்படும் சீரான கல்வியாகும்.

பெரு முயற்சியில் கல்வியாளர் களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு திட்டத்தை அரசியல் கண் கொண்டு பார்ப்பது சரியானதாகாது என்று கூறினார் புலவர் அருணா -பொன்னுசாமி அவர்கள்.

நேர்காணல் கலி. பூங்குன்றன்
19.6.2011, கரூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக