திங்கள், 27 ஜூன், 2011

ஒற்றைப்பத்தி. மூதாட்டிகள் இருவர்


இந்நாள் இரு வீராங்கனைகளை நினைவூட்டும் நாள். திராவிட இயக்க வீராங்கனை மூவலூர் ஆ. இராமாமிர்தம் (1962) அலர்மேலு அப்பாதுரையார் (2001) ஆகியோர் நினைவு நாள் இந்நாள்.

இந்த இரு வீராங்கனை களும் 1938இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்ற சீலர்கள் ஆவார்கள்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் அவர்களின் இணையரான அலர்மேலு அம்மையார் தி.மு.க. மகளிர் அணிச் செயலாளராகவும் தமிழ்நாடு சட்டப் பேரவை மேலவை உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.

1.8.1938 அன்று திருச்சி உறையூரிலிருந்து இந்தியை எதிர்த்துத் தமிழர் பெரும் படை தஞ்சை அய். குமாரசாமி பிள்ளை அவர்களின் தலைமையிலிருந்து உறையிலிருந்து வெளிப்பட்ட வாளாகப் புறப் பட்டது.

அஞ்சா நெஞ்சன் பட் டுக்கோட்டை கே.வி. அழகிரி சாமி படையை நடத்தும் தளபதியாகச் செயல்பட்டவர். நூறு பேர் கொண்ட அந்தத் தமிழர் பெரும்படையில் ஒரே ஒரு பெண் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் என்றால்.

அந்தத் தீரத்தை என்னவென்று நவில் வது! நடை பயணம் என்றால் சாதாரணமானதல்ல 577 மைல்கள். படை என்னும் அந்த நதி சென்னைக் கடற்கரையில் சங்கமித்த போது அங்கு ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்ட ஒரு பெருங்கடல் உள் வாங்கிக் கொண்டது.

அந்த வரவேற்புப் பொதுக் கூட்டத்தில்தான் தந்தை பெரி யார் தமிழ்நாடு தமிழருக்கே! எனும் முழக்கத்தை முதன் முதலாக முன் வைத்தார். மறை மலைஅடிகள் தலைமை வகித்த அந்த மாபெரும் எழுச்சிக் கூட்டத்திலும் மூவலூர் இராமாமிர் அம்மையாரும் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருவாரூரில் பிறந்த அம்மையாரின் பெற்றோர் கிருஷ்ணசாமி - சின்னம்மாள்; வறுமையின் காரணமாக பத்து ரூபாய்க்கும், ஒரு பழம் புடவைக் குமாக விற்கப்பட்டவர் - விலைக்கு வாங்கிக் கொண்டவர் ஆச்சிக்கண்ணு.

மூவலூரில் வாழ்ந்து வந் தாலும் ஆச்சிக்கண்ணு தம்மை வளர்த்து எடுத்ததாலும் நன்றி உணர்வோடு தன் பெயரில் மூவலூர் ஆ. இராமாமிர்தம் என்று இணைத்துக் கொண்டவர்.

காங்கிரஸ் கட்சியில் மாகா ணக் குழு உறுப்பினராகவும் இருந்தவர். தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி யதும் அவரும் உடன்  வெளி யேறி சுயமரியாதை இயக்கத் தொண்டராக, பேச்சாளராக நாட்டில் வலம் வந்தார். தேவதாசி என்று கூறப்படும் சமூகத்தில் பிறந்ததால் அதன் கொடுமைகளை உணர்ந்தவர் - தாசிகளின் மோக வலை எனும் நூலை எழுதியவர். தேவதாசி முறை ஒழிப்புக்கு டாக்டர் முத்து லட்சுமிக்கு தோள் கொடுத்த மூதாட்டியை எப்படிதான் மறக்க முடியும்?
- மயிலாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக