புதன், 6 ஜூலை, 2011

இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் கூடாத குறுக்கீடுகள்



எழுத்துரு அளவு Larger Font Smaller Font
2008-2009-ஆம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு பொதுப் பிரிவினருக்கு 50 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 45 மதிப்பெண்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 40 மதிப்பெண்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு 35 மதிப்பெண்கள் என்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வரையறை செய்யப்பட்டது; தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நுழைவுத் தேர்வும் ஒழிக்கப்பட்டது.

இதன் காரணமாக 2010-2011ஆம் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர் களின் எண்ணிக்கை 1,63,131 ஆக உயர்ந்தது. அதுவரை நடந்திராத அலை பாய்ச்சல் அது!

இதற்கிடையே அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஅய்சிடி) வழக்கம் போல தன்பங்குக்குக் குளறுபடியைச் செய்தது
.
பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்குப் பொதுப் பிரிவினருக்கு (OC) 50 மதிப்பெண்கள் என்றும் மற்றவர்களுக்கு 45 மதிப்பெண்கள் என்றும் அறிவித்தது.

இந்த அளவுகோலை ஏற்க மாட்டோம் என்று தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டும் விட்டது.

இப்பொழுது உயர்நீதிமன்றத்திலும் இடைக்காலத் தடை பெறப்பட்டு, பொறியியல் கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் சேர்க்கை நடந்து கொண்டு வருகிறது.

நெருக்கடி நிலை காலத்தில் சர்வாதிகாரமாக கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டிய லுக்குக் கவர்ந்து சென்றதன் காரணமாக இத்தகைய குளறுபடிகளைச் செய்யும் வாய்ப்பு டில்லிக்குக் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் செயல் பாடுகளை எதிர்த்துப் பாதுகாப்பு யுத்தத்தை நடத்த வேண்டிய நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப் படுகின்றன.

மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலைகளை நன்கு துல்லியமாக அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகளே! இவற்றின் அடிப்படையில் தகுதி மதிப் பெண்களை மாநில அரசு நிர்ணயம் செய்வதுதான் சரியானதும், நியாயமானதுமாக இருக்க முடியும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கல்வி முறையும், சூழலும் இருக்கும்பொழுது, இந்தியா முழுமைக்கும் ஒரே அளவில் தகுதி மதிப்பெண்களை வரையறை செய்வது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

விண்ணப்பம் போடுவதற்கு தகுதி மதிப்பெண் களை வரையறை செய்வதற்கும், பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கும் என்ன சம்பந்தம்?

+2 தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கல்லூரியில் சேர்ந்த மாணவன் சிறப்பாகத் தேற மாட்டான்; 45 மதிப்பெண் பெற்றவன்தான் சாதனை படைப்பான் என்பதற்கான புள்ளி விவரம் உண்டா?

+2 தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப் படையில்தான் பொறியியல் கல்லூரிகளில் சம்பந்தப் பட்ட மாணவனின் சாதனைகள் அமைந்துள்ளனவா? அதில் வேறுபாடுகள் ஏற்படுவது கிடையாதா?

பொறியியல் கல்லூரியில் நான்காண்டு படித்து தேர்வுகளில் வெற்றி பெறும் மதிப்பெண்களைப் பெற்றால்தானே அவனுக்குப் பொறியியல் பட் டதாரிக்கான சான்று  அளிக்கப்படும்.

இந்தியா குடியரசாகி பத்தாண்டுகளுக்குள் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் அடிப்படைக் கல்வி தரப்படும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் பறைசாற்றுகிறதே - அந்தக் கடமையை மத்திய அரசு செய்ததா? இந்த லட்சணத்தில் முதல் தலை முறையாகப் படித்து, தொழிற் கல்லூரியில் சேரும் மாணவர்களை வஞ்சிக்கும் வலைவீசி வீழ்த்துவது குரூரமான  உயர் ஜாதி மனப்பான்மையாகும்.

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மருத்துவக் கவுன்சில் அடம்பிடித்துக் கொண்டு இருக்கிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. திமுக ஆட்சியும் எதிர்ப்பு மனு தாக்கல் செய்தது.

மத்திய அரசின் ஆலோசனை பெறாமலேயே, கவனத்துக்குக் கொண்டு போகாமலேயே, தான் தோன்றித்தனமாக மருத்துவக் கவுன்சில் நடந்து கொண்டு இருக்கிறது என்பது உச்சநீதிமன்றத் திலேயே அம்பலமானது.

மத்திய அரசின் எண்ணத் துக்கு மாறாகவும் மருத்துவக் கவுன்சில் முரட்டுத் தனமாக நடந்து கொண்டு வருவது கண்டிக்கத் தக்கதாகும்.

கல்வி, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி சம்பந்தப் பட்டவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படுவதுதான் இதற்குச் சரியான தீர்வாக இருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக