சனி, 2 ஜூலை, 2011

மத்தியப் பல்கலைக்கழகங்களும் பிற்படுத்தப்பட்டோர் சேர்க்கையும்


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான சட்டம் - கடும் போராட்டங்கள், அழுத்தங்களுக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்புக் கூறிவிட்டது (10.4.2008).

அதே நேரத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்குத் தகுதி மதிப்பெண் என்ன என்பதில் மத்திய பல்கலைக் கழகங்கள் தங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அணுகுமுறையைப் பின்பற்ற ஆரம்பித்தன.

பொதுப் பிரிவில் குறைந்தபட்ச மதிப்பெண் (கட்-ஆப் மார்க்) பெற்ற மாணவனைவிட  10 சதவிகிதம் குறைவாக இதர பிற்படுத்தப்பட்ட மாணவன் பெற்றிருந்தால் அவன் மனு போடத் தகுதி உடையவன் என்று ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகம் தானாக முடிவு வகுத்து, இதர பிற்படுத்தப்பட்டவர்களின் சேர்க்கையை நடத்தியது.

இதனை எதிர்த்து டில்லி  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகம் மேற்கொண்ட அணுகுமுறை தவறானது; பொதுப் பிரிவு மாணவர்கள் சேர்வ தற்கான தகுதி மதிப்பெண்களில் (நுடபைடெவைல ஆயசம) 10 சதவிகிதம் குறைவாக இதரப் பிற்படுத்தப்பட்ட மாணவன் மதிப்பெண் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க அவன் தகுதி உடையவனே என்று டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்புக் கூறியது.

எடுத்துக்காட்டாக பொதுப் பிரிவு மாணவன் பெற்ற குறைந்தபட்ச மதிப்பெண் (கட்-ஆப் மார்க்) 180 பெற்றிருந்தால் இதில் 10 சதவிகிதம் குறைவாக இதரப் பிற்படுத்தப்பட்டவர் (162 மதிப்பெண்) பெற்றிருக்க வேண்டும் என்பது ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகம் மேற்கொண்ட அணுகுமுறையாகும்.

இது தவறு - பொதுப் பிரிவு  மாணவர்களுக்குத் தகுதி மதிப்பெண்களிலிருந்து 10 விழுக்காடு குறைவாக இதரப் பிற்படுத்தப்பட்டோர் பெற்றால்போதுமானது என்பதே சரியான கருத்தாகும்.

எடுத்துக்காட்டாக பொதுப் பிரிவு மாணவர் களுக்கான தகுதி மதிப்பெண்   60 சதவிகிதம் என்றால் அதில் 10 சதவிகிதம் குறைவாக (54 மதிப்பெண்கள்) இதர பிற்படுத்தப்பட்ட மாண வர்கள் பெற்றிருந்தாலே போதுமானதாகும் என்பது தான் டில்லி உயர்நீதிமன்றம் அண்மையில் கூறிய தீர்ப்பாகும்.

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இதுதான் சரி யானதாகும். இதனை எதிர்த்து சென்னை அய்.அய்.டி. யின் முன்னாள் இயக்குநர் பி.வி. இந்தர்சன் என்ற பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் துள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினைத் தாங்கள் விசாரிக்கா
மல், வழக்கமான அமர்வு வரும் 4ஆம் தேதி விசாரிக்கும் என்று கூறிவிட்டனர்.

பொதுப் பிரிவினர்களுக்கான தகுதி மதிப்பெண் ணில் 10 சதவிகிதம் குறைவான மதிப்பெண்கள் என்கிற நிலை  தான் சரியானதும், சமூக நீதியுமாகும்.

மத்திய பல்கலைக் கழகங்களில் முதல் முதலாக இப்பொழுதுதான் இதர பிற்படுத்தப்பட்டவர் களுக்குக் கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச தகுதி மதிப்பெண்களாக நிர்ணயித்தால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்கள் காலியாகக் கூடிய ஆபத்து இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

டில்லி பல்கலைக்  கழகத்தின் (31 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன) தவறான வியாக்கியானத் தாலும், அணுகுமுறையாலும் கடந்த ஆண்டு மட்டும் 4024 இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் காலியாகி, அவை பொதுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டன என்பது எத்தகைய கொடுமை!

அதேபோல ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகத்தில் 400 இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் காலியானதாகி, அவையும் உயர்ஜாதியினருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்டோர்க்கு மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுவதற்காக கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு களுக்காக மத்திய அரசு 17,000 கோடி ரூபாய் ஒதுக்கியது.

அப்படி ஒதுக்கப்பட்ட தொகையை உயர்ஜாதி யினரின் கல்வி வளர்ச்சிக்கு மடைமாற்றம் செய்யப் பட்டுள்ளது  எந்த வகையில் நியாயம்? இதனைத் தலைமைத் தணிக்கையாளரும் சுட்டிக்காட்டி யுள்ளாரே இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா?

வலது கையால் கொடுக்கப்பட்டதை இடது கையால் தட்டிப் பறிக்க அனுமதிக்கக்  கூடாது - கூடவே கூடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக