புதன், 6 ஜூலை, 2011

சமச்சீர் கல்விபற்றிய அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு



எழுத்துரு அளவு Larger Font Smaller Font
சமச்சீர் கல்வி தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட குழுவைப் பார்த்தபோதே அந்தக் குழுவின் அறிக்கை எந்தத் தன்மை உடையதாக, குணம் உடையதாக இருக்கும் என்பது யாரும் எதிர்பார்த்த ஒன்றே!
ஒன்பது பேர்கள் கொண்ட குழுவில் ஆறு பேர் பார்ப்பனர்கள் என்பதும், மூவர் மெட்ரிக் பள்ளிகளை நடத்தும் தனியார் கல்வி நிறுவனங் களைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்களைப் பொறுக்கி எடுத்து குழு அமைத்தது எந்த நோக்கத்தில் என்பதும் வெளிப்படையே! இதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. கோலி விளையாடும் சிறுவன்கூட ஒரு நிமிட நேரத்தில் அறுத்துக் கட்டிச் சொல்லி விடுவான்.
உயர்நீதிமன்றத்தில் நிபுணர் குழு அளித்த அறிக்கையோடு, சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தனியார் பள்ளிகளின் கருத்துகள் அடங்கிய குறிப்புகள் இணைக்கப் பட்டுள்ளன என்பதிலிருந்தே - எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்ற இரகசியம் வெளியில் வந்துவிட்டது.
இதில் ஒரு வேடிக்கை-விநோதம் என்னவென் றால், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து வதில் முக்கிய பங்கு வகிக்கும் அரசு பள்ளிகளிலிருந்து ஒரே ஒருவர் கூட குழுவில் இடம்பெறச் செய்யவில்லை என்பதுதான். இது ஒரு திட்டமிட்ட ஏற்பாடு என்பதில் அய்யமில்லை.
இவர்களைத் தவிர தலைமைச் செயலாளர் உள்பட அரசு அதிகாரிகள் அரசின் குறிப்பறிந்து கருத்துகளை தெரிவிக்கக் கூடியவர்கள்தான்.
இருவர் தமிழ் தெரியாத என்.சி.ஆர்.டி.யைச் சேர்ந்தவர்கள்.
எந்த அளவுக்குக் கண்மூடித்தனமாக அ.தி.மு.க. அரசும், கல்வித் துறையும் நடந்து கொண்டுள்ளது தெரியுமா? இரவு - பகல் ஏற்படுவதற்குக் காரணம்- சூரியனைப் பூமி சுற்றி வருவதுதான் என்கிற விஞ்ஞான உண்மையைக் கூட ம(றை)றுக்கிறது. சூரியன் தி.மு.க.வின் தேர்தல் சின்னமாம். அதற்காகச் சூரியனை மறைக்கச் சொல்லி ஆணையாம்!
இன்னொரு கேலிக் கூத்து என்ன தெரியுமா? அறிவியல் பாடத்தில் காந்தம் குறித்த பாடம். அதனை விளக்குவதற்குக் காந்தம் படம் போடப்பட்டுள்ளது. சட்ட காந்தம் கறுப்பு - சிவப்பு வண்ணத்தில்தான் இருக்கும் என்பது அறிவியல் அறிந்தோர் தெரிந்து வைத்திருக்கும் பாலபாடமாகும்.
கறுப்பு - சிவப்பு தி.மு.க. கொடியில் உள்ளதாம் - எனவே, சிவப்பை இருட்டடிப்பு செய்து விட்டனர்; நமக்கொரு சந்தேகம், அ.தி.மு.க. கொடியில் கறுப்பு சிவப்பு இருக்கிறதே - அதை எப்பொழுது நீக்க உத்தேசம் என்று கேட்கத் தோன்றுகிறது.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசர் போன்ற பெருமக்களின் படங்களும், நீதிக்கட்சிபற்றிய தகவல்களும் இடம்பெற்றிருப்பதுதான் பார்ப் பனர்கள் குறிப்பாக எதிர்ப்பதற்குக் காரணம்.
முதலமைச்சரும் இனவுணர்வோடு இவற்றை நீக்குவதற்கு இசைந்துள்ளார் என்றால், இவர் ஏன் அண்ணா தி.மு.க. என்ற கட்சியின் பெயரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்? கட்சியின் பெயரையும் மாற்றிட வேண்டியதுதானே?
தி.மு.க. ஆட்சியில் எது நடந்திருந்தாலும், அதனை நீக்கியே தீருவது என்ற கண்மூடித்தன மான முரட்டு சுபாவம் - கடைசியில் மக்கள் எதிர்ப்பு - வெறுப்பு என்னும் தீராப் பகையைத் தான் சம்பாதித்துக் கொடுக்கும் என்பது ஆத்திரக்காரர்களுக்குத் தெரியாது. அனுபவப் பட்ட அரசியல் தெரிந்தவர்களுக்குத் தெரிந்த சின்ன விடயமாகும்.
சமச்சீர் கல்வியில் கை வைக்காதே என்னும் மக்கள் போராட்டம் வீதியில் வெடித்துக் கிளம்பும் என்பதில் அய்யமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக