வெள்ளி, 15 ஜூலை, 2011

அனுமான்


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தேசிய நெடுஞ்சாலை களில் திடீர் திடீரென்று 30,40 அடி உயரத்தில் குரங்கு சிலை கல் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த இடங்களில் எல்லாம் இந்தக் குரங்கு சிலையை நிறுவுவதற்கு முறையாக அனுமதி பெறப் பட்டுள்ளதா?

இதுபோல குரங்கு சிலைகளை வைப்ப தற்கு எந்தவித அனுமதியும் தேவைப்படாது என்ற எழுதப் படாத உத்தரவு ஏதாவது பிறப்பிக்கப்பட்டுள்ளதா என் றெல்லாம் தெரியவில்லை.

குரங்கு சிலை என்று கேவலமாகப் பேசக் கூடாது - அது ஹனுமான் சிலை என்று கூடப் பக்தப் பெருமான்கள் சொல்லக் கூடும். அது எப்படியோ ஒழியட்டும்!

யார் இந்த ஹனுமான்? ராமனைப்பற்றி உபந்நியாசம் நடத்தப்படும் இடங்களில் எல்லாம் இந்தக் குரங்காகிய ஹனுமான் பிரசன்னம் ஆகி யிருப்பாராம். ராமப் பக்த ஹனுமான் என்று கூடச் சொல்லுவார்கள். அந்த அளவுக்கு ராமன் விசுவாசி இந்தக் குரங்கு.

இந்தக் குரங்குதான் ராமனின் தூதுவனாக இராவ ணனிடம் சென்றதாம். இலங்கா புரியைத் தகனம் செய்ததாம்.

இராம - இராவணன் யுத்த களத்தில் இலட்சுமணன் மூர்ச்சை அடைந்தபோது சஞ்சீவி மலையை அலக் காகத் தூக்கிக் கொண்டு வந்து மூலிகை சாறுபிழிந்து பிழைக்க வைத்ததும் இந்தக் குரங் காகிய அனுமான் தானாம்.

இந்த அனுமானின் தகப்பனார் யார் தெரியுமா? வாயுவாம். மாற்றான் மனைவியைக் கூடி வாயு இந்த ஹனுமனைப் பெற் றெடுத்தானாம். ஹிந்து மதச் சாளரத்தைத் திறந்தால் அதில் கொட்டுவதெல்லாம் பீப்பாய் பீப்பாயாக சாக்கடைதான்! என்றாலும் அவற்றின்மீது தெய்வீக முலாம் பூசப்பட்டு டாலடிக்கச் செய்கின்றனர்.

இந்தக் குரங்கு ராம னுக்கு இவ்வளவுத் தொண்டு செய்தும் அவனுக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

மூலநூலமாகிய வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டம் என்ன சொல் லுகிறது?

ராமபட்டாபிஷேக காலத் தில் வெகு மானிக்கப்பட்ட வர்கள் பட்டியல் தரப்பட்டுள் ளது. புருஷோத்தமர் (ராமர்) லட்சம் குதிரைகளையும், அப்படியே அப்போது ஈன்ற பசுக்களையும், நூறு காளை மாடுகளையும் முதலில் பிராமணர்களுக்குத் தானம் செய்தார் (பக்கம் 556).

மீண்டும் பிராமணர் களுக்கு முப்பது கோடி பொன் நாணயங்களையும், மிகவும் விலை உயர்ந்த பொன் ஆபரணங்களையும், வஸ்தி ரங்களையும் வழங்கினர். சுக்ரீவனுக்குப் பொன் ஆரம் ஒன்றைக் கொடுத்தார். அனு மானுக்கு சீதை இரண்டு வஸ்திரங்களையும் ஆபர ணங்களையும் கொடுத்தார்.

(ராவ் சாஹேப் பி.எஸ். கிருஷ்ணசாமி அய்யரில் மொழிபெயர்ப்பு)

போர்க் களத்தில் உயிரைப் பணயம் வைத்து ராமனுக்காக உழைத்த அனுமானுக்கு இரண்டே இரண்டு வஸ்திரங்கள்; தண் டச் சோற்றுப் பார்ப்பனர் களுக்கோ லட்சம் குதிரை களாம் அப்பொழுது கன்று போட்ட ஏராள பசுக்களாம், நூறு காளைகளாம்.

அடிமை அனுமார்களின் யோக்கியதை இதுதான் என்று காட்டுவதற்கா இந்த சாலை யோர சிலைகள்?
- மயிலாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக