செவ்வாய், 12 ஜூலை, 2011

விடைத்தாள்


தமிழ்நாட்டில் +2 தேர்வில் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண் ணப்பித்தவர்கள் 80 ஆயிரம்  பேர்கள்.  இதில் 1500 மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. ஒரு மாணவிக்கு இயற்பியல் பாடத்தில் 59 மதிப் பெண்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளதாம், எப்படி இருக்கிறது?
திண்டிவனத்தைச் சேர்ந்த தேவசேனா என்ற இந்த மாணவியின் பிரச் சினை என்ன? எப்படி 59 மதிப்பெண்கள் குறைக்கப் பட்டன?
வேறொரு மாணவி யின் குறைந்த மதிப் பெண்ணை இவரின் மதிப் பெண்ணாக மாற்றி விட் டார்கள் இதுதான் நடந்த குழப்பம்.
இந்த மாணவி மட்டும் மறு கூட்டலுக்கு விண் ணப்பிக்காமல் போயி ருந்தால் அவரின் எதிர் காலமே பாதித்து இருக் காதா? அவர் விரும்பிய கல்வியைப் பெற்று இருக்க முடியாதே!
எட்டு லட்சம் மாண வர்கள் +2 தேர்வு எழுது கிறார்கள். முப்பதாயிரம் ஆசிரியர்கள் திருத்து கிறார்கள். ஒரு விடைத் தாளைத் திருத்துவதற்கு ஆசிரியருக்கு 7 ரூபாய் 50 காசுகள் அளிக்கப் படும். இதைத் தவிர நாள் ஒன்றுக்கு பயணப்படி வேறு; ஒரு ஆசிரியர் திருத்துவதை சரி பார்க்க இரண்டு ஆசிரியர்கள், இவர்களுக்கு மேலாகத் தலைமைக் கண்காணிப் பாளர் ஒருவர். விடைத் தாளைத் திருத்துவதற்கு மட்டும் நான்கு கோடி ரூபாயை அரசு செலவு செய்கிறது.
இவ்வளவு இருந்தும் ஒரு மாணவிக்கு மறு கூட்டலில் 59 மதிப் பெண்கள் கூடுதலாகக் கிடைக்கின்றன என்றால் இதற்குப் பெயர் என்ன? இவ்வளவுப் பாதுகாப்பாக, தவறு சிறிதும் நடந்து விடக் கூடாது என்பதற் காக ஒருவருக்கு மேல் இன்னொருவர் மேற் பார்வை என்கிற ஏற்பாடு கள் துல்லியமாக இருந் தும் குளறுபடிகள் நடக் கின்றன என்றால் - அதற்கு ஆசிரியர்களாக இருக்கக் கூடியவர்களே காரணம் என்றால் எவ் வளவு கொடுமை!
பெரும்பாலும் நகர்ப் புறத்தில் படிக்கும் மாண வர்கள் தான் மறுகூட்ட லுக்கு விண்ணப்பிக்கி றார்கள். கிராமப்புறத்து மாணவர்களுக்கு இந்த விவரம் கூடத் தெரிந் திருக்க வாய்ப்பில்லை.
நகர  - கிராம பேதம் என்கிற வருணாசிரமம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது!
மதிப்பெண்கள்தான் மேற்படிப்புக்கு ஆதாரம் என்று ஆகிவிட்ட பிறகு, ஆசிரியப் பெரு மக்களே, மாணவர்களின் எதிர் காலம் உங்கள் கைகளில், கவனம்! கவனம்! கவனம்!!
-மயிலாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக